குடும்ப பிரச்சனையால், என் அப்பா அம்மா பிரிந்திருந்த சமயம், போலீஸ் வக்கீல் என வீடே அல்லோல் பட்ட நேரம், உன் சொந்தக்கார என் நண்பன் உன் அப்பாவிடம் உதவி கேட்க உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான் என்னை.
முதன் முறையா உங்க வீட்டுக்கு இப்படி ஒரு உதவி கோறும் நிலமையிலா வரவேண்டும் மனசு உடைஞ்சுப்போயிடுச்சு, ஆனா உன் வீட்டுக்கு வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது நினைச்சு பின் நாட்களில் சந்தோஷப்பட்டுக்கிட்டேன்.
பிரச்சனைகளை கவனமாக கேட்டு உதவி செய்த உன் அப்பாவை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை......உன்னால் எப்படி அவரை அவ்வளவு எளிதல் மறக்க முடியும்?? உன் வலி எனக்கு புரிகிறது.
உன் அப்பா செய்த உதவிக்கு நன்றி சொல்லும் சாக்கில் உன் வீட்டுக்கு மற்றுமொருமுறை வந்தேன், உன்னைதான் பார்க்கவே முடியவில்லை அன்று, எவ்வளவு ஏமாந்துப்போனேன் தெரியுமா???
என்னிக்குமே பார்க்க முடியாம ஏமாந்துப்போய்டுவேனோன்னு தான் இவ்வளவு நாளும் நினைச்சு வருந்திட்டு இருந்தேன், ஆனா என் நம்பிக்கை வீண்போகலை..........மறுபடியும் உன்னை சந்திச்சுட்டேனே!!!
இந்த சந்திப்பும்.........'சந்தித்தோம் பிரிந்தோம்' ன்னு முடிஞ்சிடுமா??
பொறுமையுடன் காத்திருக்கிறேன் உனக்காக.....
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment