காலேஜ் கேம்பஸில் உன்னை எங்கேயாவது பார்க்க மாட்டோமான்னு என் கண்கள் அலைபாய்ஞ்சிருக்கு,
ஆனா Basket ball tournament காக பிஸ்ஜி காலேஜ் போயிருந்தப்போ, ஃப்னல் மேட்சுக்கு நீ உன் அண்ணாகூட மேட்ச் பார்க்க வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.
வார்ம்-அப் முடிஞ்சு மேட் ஆரம்பிக்க சில நிமிஷம் இருந்தப்போதான் நான் எதேச்சையா கேலரில உன்னை பார்த்தேன், எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சுன்னு சொன்னா நீ நம்பவே மாட்டே, அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.
நீ மேட்ச் பார்த்துட்டு இருக்கிறதே இன்னும் நல்லா விளையாடனும்னு என்னை மெனக்கெட வைச்சுதுன்னா நம்புவியா??
ஃபைனல் மேட்சில வின் பண்ணினதும், உன்னை கேலரில தேடினா உன்னை ஆளே கானோம், அண்ணாகூட அதுக்குள்ள போய்ட்டே போலிருக்கு. விஷ் பண்ணாம போய்ட்டியேன்னு கொஞ்சம் வருத்தம்,
ஆனா மறுநாள் காலேஜ்ல பார்த்தப்போ விஷ் பண்ணினதும் அந்த கவலை எல்லாம் பறந்தே போச்சு!!
Wednesday, July 2, 2008
Tuesday, July 1, 2008
முதல் 'உதவி'
குடும்ப பிரச்சனையால், என் அப்பா அம்மா பிரிந்திருந்த சமயம், போலீஸ் வக்கீல் என வீடே அல்லோல் பட்ட நேரம், உன் சொந்தக்கார என் நண்பன் உன் அப்பாவிடம் உதவி கேட்க உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான் என்னை.
முதன் முறையா உங்க வீட்டுக்கு இப்படி ஒரு உதவி கோறும் நிலமையிலா வரவேண்டும் மனசு உடைஞ்சுப்போயிடுச்சு, ஆனா உன் வீட்டுக்கு வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது நினைச்சு பின் நாட்களில் சந்தோஷப்பட்டுக்கிட்டேன்.
பிரச்சனைகளை கவனமாக கேட்டு உதவி செய்த உன் அப்பாவை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை......உன்னால் எப்படி அவரை அவ்வளவு எளிதல் மறக்க முடியும்?? உன் வலி எனக்கு புரிகிறது.
உன் அப்பா செய்த உதவிக்கு நன்றி சொல்லும் சாக்கில் உன் வீட்டுக்கு மற்றுமொருமுறை வந்தேன், உன்னைதான் பார்க்கவே முடியவில்லை அன்று, எவ்வளவு ஏமாந்துப்போனேன் தெரியுமா???
என்னிக்குமே பார்க்க முடியாம ஏமாந்துப்போய்டுவேனோன்னு தான் இவ்வளவு நாளும் நினைச்சு வருந்திட்டு இருந்தேன், ஆனா என் நம்பிக்கை வீண்போகலை..........மறுபடியும் உன்னை சந்திச்சுட்டேனே!!!
இந்த சந்திப்பும்.........'சந்தித்தோம் பிரிந்தோம்' ன்னு முடிஞ்சிடுமா??
பொறுமையுடன் காத்திருக்கிறேன் உனக்காக.....

Subscribe to:
Posts (Atom)